ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > உறுப்பினராக இணைத்துக்கொள்ள அழைக்கிறது சரஸ்வதி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் கழகம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

உறுப்பினராக இணைத்துக்கொள்ள அழைக்கிறது சரஸ்வதி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் கழகம்

சுங்கை பூலோ, நவ. 25-

சரஸ்வதி தமிழ்ப்பள்ளி 72 ஆண்டுகளாக பீடு நடைப் போட்டுக்கொண்டிருக்கிறது, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணக்கள் கல்விமான்களாகவும், தொழில் முனைவர்களாவும் உயர்ந்து நிற்கின்றனர் ஆனால் இப்பள்ளியின் முன்னாள் மாணக்களை ஒருங்கிணைக்க முன்னாள் மாணவர் கழகம் இல்லை என்பது வருத்தத்திற்குறிய செய்தியாகும். பலரும் பல வழியில் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அந்த முன்னெடுப்புகள் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

முன்னாள் மாணவர் கழகம் இல்லாததால் அப்பள்ளியில் படித்த தன் முன்னாள் மாணவர்கள் குழாம் (Bath) தங்களால் முடிந்த உதவிகளை பள்ளி செய்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 6.3.19ஆம் நாள் சுங்கை பூலோ சரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகத்தை இயக்கப் பதிவுத் துறையில் 89,96,97,99  முன்னாள் மாணவர்களால் பதிவுச் செய்யப்பட்டது.

அடுத்து முன்னாள் மாணவர்களை ஒருஙகிணைப்பதற்காக வருகின்ற 1.12.2019ஆம் நாள் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை முன்னாள் மாணவர் கழகத்தின் புதிய உறுப்பினர் பதிவுக்கான நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது முன்னாள் மாணவர் கழகம்.

இதுவரை பள்ளிக்கு தனித்தனியாக உதவிச் செய்துக்கொண்டிருந்த முன்னாள் மாணவர்கள் முன்னாள் மாணவர் கழகத்தில் ஒருங்கிணைந்து அமைப்பாக செய்பட முன்னாள் மாணவர்களை முன்னாள் மாணவர்களை அழைக்கிறது. இம்முன்னாள் மாணவர் கழகத்தில் இணைய 1.12.19ஆம் நாள் அன்று 1 அடையாள அட்டை நகலும், கடைப்பிதழ் அளவுக்கொண்ட 2 படங்களும் உடன் கொண்டு வரவேண்டும். அதோடு பதிவுக் கட்டணமும் ஆண்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

அவ்வப்போது தகவலுக்கு https://www.facebook.com/alumnisaraswathysgbuloh/ முகநூல் தளத்திலும் மேலும் தகவல் அறிய செயலாளர் திரு மணிராச் 012-2243159 அல்லது தலைவர் திரு தமிழகரன் 016-4196429 எண்ணுடன் தொடர்புக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன