தென்கொரியா, நவ.25-

தென்கொரியாவின் விண்வெளி தொழில்துறையின் வளர்ச்சியை அறிந்துக்கொள்ள மலேசியா ஆர்வமாக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

ஆகக் கடைசியாக 2002ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது, அந்நாட்டிற்கு வருகைப் புரிந்ததாகவும், அப்போதிலிருந்து தென்கொரியா விண்வெளித் துறையில் அபார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதைக் கண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்-சின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தளத்திற்கு வருகைப் புரிந்த துன் மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவின் போர் விமானங்கள் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் விமானங்கள் மீது தாம் எப்போதும் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக கூறிய துன் மகாதீர், அவை இயங்கும் முறை மற்றும் அதன் வளர்ச்சிக் குறித்தும் தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.