செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > முதல் நபராக பதவி விலகத் தயார்! சைட் சாடிக்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

முதல் நபராக பதவி விலகத் தயார்! சைட் சாடிக்

கோலாலம்பூர், நவ.25-

அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாம் தவறு புரிந்திருப்பதைக் கண்டறிந்தால், இளைஞர் விளையாட்டு அமைச்சர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தன்னை இறைவன் பார்த்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட சைட் சாடிக், அதிகார மற்றும் நிதி முறைகேட்டை தாம் புரிந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டால், தாமே முதல் ஆளாக பதவி விலக விருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தேசிய முன்னணியின் ஜேலெபு நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஜாலாலுடின் அலியாஸ், மலாக்கா, சிலாங்கூர், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் தேசிய இளைஞர் திறன் மையங்களை நடத்துவதற்கு 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகை ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தைத் தாம் கொண்டிருப்பதாக மக்களவையில் கூறினார்.

அதன் பிறகு பேசிய, தேசிய முன்னணியின் பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினரான முஹமட் ஷாஹார் அப்துல்லா, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் குத்தகை வழங்கப்பட்டது உறுதிபடுத்தப்பட்டால் பதவி விலகுவீர்களா என வினவிய போது, சைட் சாடிக் அக்கூற்றை முன்வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன