சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் திரான்ஸ்ஃபாமாசி மிண்டா A
சமூகம்

மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் திரான்ஸ்ஃபாமாசி மிண்டா A

ஜோகூர் பாரு, நவம்பர் 26-

சமுதாயத்தின் மீது மாணவர்கள் சிறு வயதிலேயே அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த திரான்ஸ்ஃபாமாசி மிண்டா A கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் ராணீ கனகராஜ் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தலைமைத்துவ பயிற்சியை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரான்ஸ்ஃபாமாசி மிண்டா A கல்வி நிலையம், அண்மையில் ஸ்கூடாய் பகுதியில் வசதி குறைந்த 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருளதவி, சமையல் பொருட்கள்  மற்றும் காசோலையை வழங்கினர்.

இந்த நிகழ்விற்கு விஐபி விருந்தினர் திரு ஜீவன் சுப்பிரமணியம், சமுதாயத்தின் பிரதிநிதிகள் அவர்களது மாணவர்கள்தான் என்பதை அவர்களின் சிறு வயதிலேயே அவர்கள் மனதில் ஆழமாக பதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயத்தில் இளைஞனாக காலடி எடுத்து வைக்கும் போது சமுதாயத்தின் மீது அவர்கள் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருப்பார்கள் என விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரி திரு       ஜீவன் சுப்ரமணியம் கூறினார்.மேலும் பல குடும்பங்களுக்கு அவர் நன்கொடையும் வழங்கினார்.

திரு ஜீவன் சுப்பிரமணியம் கட்டுரை எழுதும் போட்டி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். மேலும் அவர் மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆசீர்வதித்தார்.

நிகழ்வை வெற்றிகரமாக ஆக்கியதற்காக அவர் செய்த பங்களிப்புக்கு நன்றி மற்றும் பாராட்ட விரும்புகிறோம்.

திரு கேசவன், பாலா, ஜீனா, தேவா, சுபா, மோகன், திரு , பிஐபிஜி ரினி பள்ளி (வஹ்னி) மற்றும் திரு ராஜா, எங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட நன்கொடையாளர்கள் அனைவருக்கும் திரான்ஸ்ஃபாமாசி மிண்டா A கல்வி நிலையம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன