சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் 24 வருடத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பிரபல நடிகை மீனா இணைந்து நடிக்கிறார்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூரி காமெடி வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

The enduring beauty #Meena joins the cast of #Thalaivar168@rajinikanth@directorsivapic.twitter.com/vq7RBpkZo9

— Sun Pictures (@sunpictures) December 10, 2019

இந்நிலையில், தற்போது நடிகை மீனா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் மீனா ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்.