சண்டைப் போட்டுக் கொள்ள வேண்டாம்.

சிறந்தத் தீர்வைக் காண்பதற்கான வழிகளைக் கண்டறிந்து, ஒன்றாக செயல் படுங்கள்.

கட்சியில் ஏற்படும் பிரச்னைகளை, நம்பிக்கைக் கூட்டணி உறுப்புக் கட்சிகள், சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்வதைக் காண விரும்பும், பெர்சத்து கட்சித் தலைவர், டான் ஶ்ரீ முகிடினின் இவ்வாறு அறிவுரை வழங்கி இருக்கின்றார்.

பிரச்சனை எழுகிறது என்றால் அதனை மக்கள் தற்போது பார்த்துக் கொண்டிருப்பதால், அதை விரைந்துதுத் தீர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும்.

அரசாங்கத்தில் நம்பிக்கைக் கூட்டனியின் உறுப்புக் கட்சிகளாக நாம் இருக்கின்றோம். நமது வேலை என்னவென்பதைக் காணவே அவர்கள் விரும்புகின்றனர். மாறாக, நாம் ஒருவருக்கொருவர் சண்டைப் போட்டுக் கொள்வதைக் காண்பதை அவர்கள் விரும்பவில்லை.

அதில் அவர்கள் ஆர்வம் கொள்வதில்லை. அது அவர்களைக் கவலையடையச் செய்கிறது. மக்களுக்கு உதவுவதற்காக நாம் என்ன செய்கின்றோம் என்பதைக் காண அவர்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாம் என்று முகிடின் யாசின் அனைத்து தரப்புக்கும் ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.

கெஅடிலான் கட்சியில் தற்போது நிலவிவரும் உள்விவகாரங்கள் குறித்து கருத்து கேட்டபோது உள்துறை அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.