செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 25 இந்திய அரசு சாரா அமைப்புகளுடன் அமைச்சர் குலசேகரன் சந்திப்பு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

25 இந்திய அரசு சாரா அமைப்புகளுடன் அமைச்சர் குலசேகரன் சந்திப்பு

புத்ராஜெயா, டிசம்பர் 12-

மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் 25 இந்திய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிகள் இன்று அமைச்சர் குலசேகரனை சந்தித்தனர்.

குடியுரிமை,அடையாள ஆவணச் சிக்கல், வீட்டுடைமை, கல்வி, நகர்ப்புற வறுமை மற்றும் சமூகக் சீர்கேடுகள், வேலை வாய்ப்புகள், வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்பு, மின்சுடலை ஆகிய 7 முதன்மைக் கூறுகளைச் சார்ந்து 12-ஆம் மலேசிய திட்டத்திற்கான உள்ளீடுகளை வழங்குவது இச்சந்திப்பு கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பல்லாண்டுகளாக சமூகம் சார்ந்து இயங்கி வரும் பல முதன்மை அரசுசாரா அமைப்புகளான கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் (EWRF), மை ஸ்கில்ஸ் அறவாரியம் (Myskills), இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பு (GOPIO), தமிழ்க்கல்வி ஆய்வு மேம்பாட்டு அறவாரியம் (TFM)  உட்பட இன்னும் நிறைய அமைப்புகளின் பிரதிநிகள் புத்ராஜெயா மனிதவள அமைச்சின் அலுவலகத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.

சமூகத்திடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், அவர்களின் நீடித்த தேவைகள், அதற்கான பரிந்துரைகள் ஆகியவை இன்றைய கலந்துரையாடல் நிகழ்வில் விவாதிக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன