வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புதிய குடியுரிமைச் சட்டம்: மகாதீரின் கூற்று தவறானது!
அரசியல்இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

புதிய குடியுரிமைச் சட்டம்: மகாதீரின் கூற்று தவறானது!

கோலாலம்பூர் டிச.  21-

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருந்த கருத்தை இந்தியாவின் வெளியுறவுத்துறை முற்றாக மறுத்தது.

இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்துத் தெளிவான விளக்கம் இல்லாமல் புரிதல் இல்லாமல் இதுபோன்ற கருத்துக்களை மலேசியா வெளியிடக்கூடாது என்றும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியுரிமைச் சட்டம் அங்கு வாழும் சிறுபான்மையான சமூகத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்பதையும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

மலேசிய பிரதமரின் கருத்து உண்மையில் தவறானது. குறிப்பாக இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்துக் கருத்து தெரிவிப்பதை மலேசியா தவிர்க்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த விவகாரம் குறித்து மகாதீரிடம் வினவப்பட்டபோது அது என்னுடைய கருத்து என பதிலளித்தார். ஒரு விவகாரம் குறித்துக் கருத்துரைக்க எனக்குத் தனிப்பட்ட உரிமை உண்டு.

கோலாலம்பூர் உச்சமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மகாதீரிடம் இந்திய வெளியுறவுத்துறை அனுப்பிய பதில் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியாவின் பார்வை வேறு எனது பார்வை வேறு என்றும் மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன