2019 : விளையாட்டில் சாதித்த மலேசிய ஹீரோக்கள்

0
25

2019ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையில் மலேசியா பல சாதனைகளையும் வெற்றிகளையும் கண்டிருந்தாலும் அதற்கு நிகராக தோல்விகளையும் சந்தித்திருக்கிறது.

இத்துறையில் மற்ற இனத்தவர்களை தவிர்த்து இந்திய விளையாட்டாளர்களும் சாதனைகளை படைத்து சமுதாயத்திற்கு வெற்றியை தேடித் தந்திருக்கின்றனர்.

அந்த சாதனைகளை அநேகன் இணைத்தள பதிவேடு ஒரு தொகுப்பாக இங்கு எடுத்துக்காட்டுகிறது.

  • 2019ஆம் ஆண்டில் தேசிய காற்பந்து அணியான HARIMAU MALAYA பங்கேற்ற மொத்தம் 13 போட்டிகளில் ஒன்பதில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், மணிலாவில் நடைபெற்ற சீ விளையாட்டு போட்டியில் தொடக்க கட்டத்திலேயே தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியே.

  • மலேசிய சைக்கிளோட்ட வீரர் அசிசூல் ஹஸ்னி அவாங் அனைத்துலக ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 7 தங்கப் பதக்கங்களுக்கும் மேல் வென்றிருக்கிறார். ஆனால், அவர் தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றார்.

  • பேட்மிண்டனில் பல வெற்றிகளை கண்டு பல விருதுகளையும் பதக்கங்களையும் குவித்த டத்தோ லீ சொங் வேய், ஜனவரி 12ஆம் தேதி தமது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

  • அடுத்த ஆண்டு தோக்யாவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க முக்குளிப்பு, அம்பு எய்தல் உட்பட, 8 விளையாட்டு வீரர்கள், தகுதி அடிப்படையில் தங்களின் டிக்கெட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
  • பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்ற 30ஆவது சீ விளையாட்டு போட்டியில், மலேசியா 52 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றது. ஆனால், 70 தங்கப்பதக்கங்களை பெற வேண்டும் என்ற இலக்கோடு களம் மலேசியா 55 தங்கப்பதக்கங்களை மட்டும் வென்றது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை அளித்தது.

இந்தியர்களின் தொடர் வெற்றி

  • ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல திறமைகள் கொண்ட ஸ்ரீ அபிராமி அனைத்துலக ரீதியில் பல போட்டிகளில் கலந்து கொண்டார். 6 வயதிலேயே தங்கங்களை குவித்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
  • சீ விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் கிஷோனா செல்வதுரை 20-22, 21-14, 21-13 என்ற புள்ளிகளில் இந்தோனேசியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று நமக்கு பெருமை சேர்த்தார்.
  • மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு மன்றத்தின் பெண்களுக்கான 800 மீட்டர் திடல்தட ஓட்டப் போட்டியில் ஜொகூர் மாநிலத்தை சேர்ந்த பத்மலோஷினி ஜெயசீலன் வெற்றிப் பெற்றார்.
  • சீ போட்டியில் கராத்தேவில் மலேசியாவைச் சேர்ந்த பிரேம் குமார் செல்வம் தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாரா உலக சாம்பியன்ஷிபில் அம்பு எய்தல் போட்டியில், சுரேஷ் செல்வதம்பி தங்கப் வென்று சமுதாயத்திற்கு பெருமைத் தேடித் தந்த அவர் தோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

2019ஆம் ஆண்டு விளையாட்டுத் துறையில் சவால்கள் நிறைந்த வெற்றியையும் எதிர்பாராத தோவ்விகளையும் சந்தித்த மலேசியா வரும் 2020இல் ரசிகர்களின் வற்றாத ஆதரவில் வெற்றிகளை மட்டுமே சந்திக்கும் என நம்புவோம்.