திங்கட்கிழமை, மே 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 2019 ஆம் ஆண்டில் மக்களுக்காக பக்காத்தான் ஹரப்பானின் திட்டங்கள் & கொள்கைகள் !
முதன்மைச் செய்திகள்

2019 ஆம் ஆண்டில் மக்களுக்காக பக்காத்தான் ஹரப்பானின் திட்டங்கள் & கொள்கைகள் !

2019 ஆம் ஆண்டில் மக்களின் நல்வாழ்வுக்காக பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் முனைப்புகளையும் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மக்களின் சமூக பொருளாதாரத்தையும் சுபிட்சத்தையும் அதிகரிக்க இந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில் ஒன்றுதான் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தொடக்கி வைத்த 2030 கூட்டு வளப்ப தூரநோக்கு இலக்கு. இந்த திட்டத்தின் மூலம், நாட்டின் மேம்பாட்டில் மக்களுக்கான வளப்பத்தைப் பகிர்ந்தளிக்க ஒரு புதிய அத்தியாயத்தை எழுத பக்காத்தான் ஹரப்பான் தொடங்கியுள்ளது.

WKB2030 என அழைக்கப்படும் அந்த திட்டத்தின் மூலம் நிலையான மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் வழி கிடைக்கப் பெறும் வளப்பத்தை அனைத்து இனங்களும் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் பாக்காத்தான் திட்டமிட்டுள்ளது.

WKB2030 திட்டத்தைத் தவிர, தேசிய போக்குவத்து கொள்கை, தேசிய தூய்மைக் கொள்கை, தேசிய வேலையிட சுகாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தேசிய சமூகக் கொள்கை, தேசிய தொழில்முனைவர் கொள்கை என பல்வேறு கொள்கைகளையும் பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் வரைந்துள்ளது.

இந்த திட்டங்கள், கொள்கைகளின் மூலம் 2030 ஆம் ஆண்டில் மலேசியாவை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்து காகிதங்களில் எழுத்து வடிவங்களில் மட்டுமே இல்லாமால், செயல் வடிவங்களாக மாற வேண்டும் என்பதே அநேகனின் எதிர்பார்ப்பாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன