2019 ஆம் ஆண்டு முழுவதும் நாட்டில் ஐந்து இடைத் தேர்தல்கள் நடைபெற்ற வேளையில் இதில் நான்கு இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற வேளையில் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற்ற செமினி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தேசிய முன்னணி வாகை சூடியது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் வெற்றி பெற்றார். எனினும் மே மாதம் நடைபெற்ற சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி பங்கேற்கவில்லை. இந்த இடைத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி வெற்றி பெற்றது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜோகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் டத்தோ ஶ்ரீ வீ ஜெக் செ, பிரிபூமி கட்சியின் வேட்பாளரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு கிடைத்த நான்கு தோல்விகள், பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் இன்னும் திறம்பட செயல்படுவதற்கு வழிக் கோரியுள்ளது. இந்த இடைத் தேர்தல்களில் வாக்காளர்கள் கொடுத்திருக்கும் முடிவானது அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு அக்கூட்டணியி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் முதல் இடைத் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி சபாவின் கிமானிசில் நடைபெறவிருக்கிறது.