கேள்வித்தாளில் ஜாகிர் நாயக்: விசாரணையைத் தொடங்கியது பல்கலைகழகம்

கங்கார், டிச. 30-

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் குறித்த கேள்வி பல்கலைக்கழகக் கேள்வித்தாளில் இடம் பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக மலேசிய பெர்லீஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

”இதற்கான விசாரணை முழுமை பெற்ற பிறகு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்” எனப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பல இன கலாச்சாரப் பின்னணியாகக் கொண்டிருப்பதால் பல்கலைக்கழகம் இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரையாளர்கள் இன மற்றும் மத ரீதியில் அதிக உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்களா? என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இச்சூழ்நிலையில் மக்களுக்கு ஆத்திரத்தை மூட்டும் நடவடிக்கைகளை யாரும் முன்னெடுக்க வேண்டுமெனப் பல்கலைக்கழகம் கோரிக்கையை முன் வைத்ததோடு விசாரணையை நடத்த பல்கலைகழகத்திற்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மலாய் மொழி கேள்வித்தாளில் ஜாகிர் நாயக் இஸ்லாமிய உலகின் ஒரு சின்னம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அவர் உண்மையான இஸ்லாத்தை பரப்புவதிலும் ரசூலுல்லாஹ்வின் அல்-குர்ஆன் மற்றும் போதனைகளைப் பின்பற்றுவதிலும் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நியாயமாகவும் பதிலளிக்க முடியும். இருப்பினும் அவரைப் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உங்களுடைய கருத்து என்ன ஒரு மலேசியராக இது ஏன் நடக்கிறது எனக் கேட்கப்பட்டிருந்தது குறித்து மலேசிய இந்திய காங்கிரசின் உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். பின்னர் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here