கருத்து வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைவோம்! – மனிதவள அமைச்சர் குலசேகரன்

2019-ஆம் ஆண்டுக்கு நன்றியுடன் விடைகொடுத்து உலக மக்கள் 2020 ஆண்டை குதூகலத்துடன் வரவேற்க வேண்டும். இந்தப் புதிய ஆண்டு மலேசிய மக்களுக்கு மகிழ்ச்சி, இன்பம், அன்பு, ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைந்திருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.

மலேசிய மக்களிடையே மாறுப்பட்டிருக்கும் கருத்துகள் களைந்து, புத்தாண்டு அனைவரிடத்திலும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொண்டு வருவதாக இருக்கட்டும். புதிய விடியலின் மூலம் புதிய எண்ணங்கள் உள்ளத்தில் ஆக்கிரமிக்கச் செயது ஒளிமயமான வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் மக்களின் உரிமைகள், மனித நேயம், சுதந்திரம் மற்றும் அனைவரின் நல்வாழ்வையும் மதித்துப் பாதுகாத்து பிளவுபடாத ஒரு நாடாக மலேசியா முன் வர வேண்டும்.

ஒரு நாட்டின் பல்லின மக்களின் இன, மொழி, சமய கலாச்சார மற்றும் ஏனைய தனித்துவமான பண்புகளை மதிப்பதன் மூலம் ஏற்படுகின்ற ஒற்றுமையைப் பேணுவதன் மூலமே ஒரு வளம்மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டி அனைத்து குடிமக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2020 ஆம் ஆண்டை சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும்.

புதிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டு வந்திருக்கும் இப்புதிய ஆண்டில், மலேசிய மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.

மனிதவள அமைச்சர்
மாண்புமிகு எம். குலசேகரன்