”மாஸ்டர்” என்ன சொல்ல போகிறார் !

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64ஆவது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் தளபதி வஜய் இணைந்திருப்பதால், இது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் இதில் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை7.30 மணிக்கு வெளியிட்டனர்.

இந்நிலையில், படத்திற்கு ”மாஸ்டர்” என்று தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

பைரவா திரைப்படம் கல்வி ஊழல் குறித்துப் பேசியது. மெர்சல் மருத்துவத் துறை அட்டூழியங்களை எடுத்துரைத்தது. சர்கார் திரைப்படம் அரசியலின் முகத்திரையைக் கிழித்தது. இந்நிலையில் மாஸ்டர் எந்த விவகாரத்தைக் கையில் எடுக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.