ராகாவின் அன்பின் ஒரு துளி

0
2

கோலாலம்பூர், ஜனவரி 2-

மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா தனது புதிய சகாப்தத்தை ‘கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி’ எனும் சமூக நிகழ்வின் மூலம் இனிதே தொடங்கியது. கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 43 மாணவர்களுக்கு பயனளித்த இச்சமூக நிகழ்வு அண்மையில் சுபாங் ஜெயா மைடின் பேரங்கடியில் விமரிசையாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், ராகாவின் அபிமான அறிவிப்பாளர்களான ஜெய் மற்றும் கோகுலன் இருவரும் சுமார் 43 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், புத்தக பைகள் மற்றும் காலணிகள் போன்ற பள்ளி உபகாரணப் பொருட்களை வழங்கி சிறப்பித்தனர். கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி எனும் இச்சமூக நிகழ்வை சமூக சேவை ஆர்வலர் மற்றும் ‘டிஜியின் சாதனை ஹீரோ 2017’ புகழ் மாதவன் சங்கரனும் இணைந்து நடத்தினர்.

ராகாவின் உள்ளடக்க மேலாளர் சுப்பிரமணியம் வீராசாமி கூறுகையில், 2020இல் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததில் ராகா மிகவும் பெருமிதம் கொள்வதோடு மகிழ்ச்சியும் அடைகின்றது. மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான நாங்கள், கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதோடு சமூகத்திற்கும் எங்களால் இயன்ற நன்மைகளையும் செய்கின்றோம். இப்பிரச்சாரத்தை ஆதரித்து மற்றும் பங்களித்ததோடு மட்டும்மல்லாம் வருகை புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.