செந்தில்வேலு கார், வீட்டின் மீது சிவப்பு சாயம், இறந்த கோழி வீசப்பட்டது!

0
4

சிரம்பான், ஜன.7-

சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாக்கிர் நைய்க்கைப் பற்றி, பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு நாளுக்கு பின்னர், சிரம்பான் நகராண்மைக் கழக உறுப்பினரான கே.செந்தில்வேலுவின் மீது சிவப்பு நிற சாயமும் வீட்டின் முன்புறம் இறந்த கோழியும் வீசப்பட்டுள்ளது.

அவரது பேஸ்புக் பதிவினால், அதிருப்தியுற்ற தரப்பினர், அவ்வாறு செய்திருக்கக்கூடுமென கூறப்படும் நிலையில், தாம் அத்தகைய ஆருடத்தைக் கொண்டிருக்கவில்லை என செந்தில்வேலு கூறியுள்ளார்.

மேலும், அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையை மேற்கொள்ளப்பட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சம்பவத்தில், நள்ளிரவு மணி 12.20 அளவில், நீலாயிலுள்ள அவரது வீட்டின் முன்புறம் மூன்று பைகளில் நிரப்பப்பட்ட சிவப்பு சாயம் வீசப்பட்டுள்ளது. அந்த சாயம் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்ட, அவரது புரோடுவா மைவி ரகக் காரின் மேல் வீசப்பட்டுள்ளது. அதோடு, வீட்டின் முன்புறத்திலும் சாயம் வீசப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, இரவு மணி 11.00 அளவில் வீட்டிற்கு திரும்பியிருந்த செந்தில்வேலு, நேராக தூக்க சென்றுள்ளார்.

ஆயினும், அண்டை வீட்டார் தன்னிடம் தெரிவித்த பிறகே, அச்சம்பவம் தமக்கு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செந்தில்வேலு அச்சம்பவம் தொடர்பில், போலீசில் புகார் அளித்துள்ளார்.