திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட தடை
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட தடை

சென்னை ஜனவரி 7*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருக்கும் தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால் வியாழக்கிழமை மலேசியாவில் திரையிடப்படவிருந்த தர்பார் படம் வெளிவருமா? என்ற சிக்கல் எழுந்துள்ளது.

லைக்கா நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவின் டிஎம்ஒய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற வேளையில் மலேசியாவில் தர்பார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது மலேசிய ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

லைக்கா நிறுவனம் 23 கோடி கடனை திருப்பி வழங்காமல் தர்பார் திரைப்படத்தையும் மலேசியாவில் வெளியிடக்கூடாது என டி.எம்.ஒய். நிறுவனம் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இதனிடையே வழக்கு முடிவு லைக்கா நிறுவனத்திற்கு எதிராகத் திரும்பி இருப்பதால் மலேசியாவில் தர்பார் திரைப்படம் வெளிவராது எனக் கூறப்படுகின்றது.

லைக்கா நிறுவனம் நாளை புதன் கிழமைக்குள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண விடில் தர்பார் திரைப்படம் மலேசியாவில் மட்டும் வெளிவராது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன