‘ராப் போர்களம்’ போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

0
2

கோலாலம்பூர், ஜனவரி 7

18 முதல் 28 வயதிலான அனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோ உலகம் பிரத்தியேகமாக வழங்கும் மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான RAP Porkalam நேர்முகத்தேர்வில் பங்கேற்க இதோ வந்துவிட்டது ஓர் அறிய வாய்ப்பு. இப்போட்டியின் நேர்முகத்தேர்வு ஜனவரி 11ஆம் தேதி கோலாலம்பூர் அமைந்துள்ள ஆஸ்ட்ரோ புக்கிட் ஜாலிலில் காலை மணி 10 முதல் மதியம் மணி 1 வரை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

ராப்பராக மகுடம் சூட வேண்டும் என்பது உங்களுடைய நீண்ட நாள் கனவாக இருக்குமாயின், நீங்கள் ஓர் இசை தாளத்தை இசைக்கும் பொழுது உங்களை சுற்றியுள்ள மக்கட் கூட்டம் ஆரவாரத்தோடு உங்களை உற்சாகப்படுத்துவதை நீங்கள் விரும்பினால், உங்கள் கனவை நினைவாக்க இதுவே ஓர் அறிய வாய்ப்பு! இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த இளைஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.

நேர்முகத்தேர்வின் போது, ​​போட்டியாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள மூன்று இசை பதிவில் ஒன்றினை தேர்வு செய்து குறைந்தது 1 நிமிடத்திற்கு தமிழில் ராப் செய்ய வேண்டும்.

16 திறமையாளர்கள் நேர்முகத்தேர்வில் அடையாளம் காணப்பட்டு, பின்னர் பல நீக்கங்களை உள்ளடக்கியிருக்கும் தீவிர ராப் போர் சுற்றுகளுக்கு உட்படுத்தப்படுவதோடு, அடுத்த சுற்றிற்க்கு முன்னேறுபர்கள் பார்வையாளர்களின் வாக்குகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவர்.

முதல் நிலையில் வாகை சூடுபவர் சுமார் ரி.மா 5000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசை சிங்களை வெளியீடு காணும் ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார். அதே வேளையில், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுபவர் சுமார் ரி.மா 2000 ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு அவரது விருப்பத்திற்கு இணங்க Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசை சிங்களை வெளியீடு காணும் வாய்ப்பு வழங்கப்படும்.

மேல் விவரங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, www.astroulagam.com.my/RapPorkalam எனும் அகப்பக்கத்தை வளம் வாருங்கள்.