வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நாளை தர்பார் வெளிவரும் –லோட்டஸ் உறுதி
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நாளை தர்பார் வெளிவரும் –லோட்டஸ் உறுதி

கோலாலம்பூர், ஜனவரி 8-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் மலேசியாவில் நாளை வெளிவரும் என லோட்டஸ் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ரெனா துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கும் இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

லைக்கா நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவின் டிஎம்ஒய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. அந்த வழக்கு விசாரணையில் மலேசியாவில் தர்பார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் நாளை வியாழக்கிழமை தர்பார் திரைப்படம் மலேசியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நிச்சயம் வெளிவரும் எனவும் ரெனா துரைசிங்கம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன