மார்ச் முதல் 10 கோடி மரங்கள் நடப்படும்! – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர் ஜன. 8-

நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மலேசியா முழுவதும் சீரழிந்த பகுதிகளை 2025ஆம் ஆண்டு வரையில் சீரமைக்கும் முயற்சியாக 10 கோடி மரங்களை நடும் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தைத் தொடங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் மார்ச் 21ஆம் தேதி தொடங்கப்படும் என நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். இந்தத் திட்டம் வெற்றியடைவதற்கு வணிக மற்றும் தனியார் துறைகளில் வலுவான பங்களிப்பு மற்றும் ஆதரவை அரசு பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

முதன்முறையாக நடைபெற்ற வணிக மற்றும் தனியார் துறைகளுக்கான உயிரியல் பன்முகத் தன்மை மன்றத்தின் மாநாட்டில் உரையாற்றியபோது டாக்டர் சேவியர் மேற்கண்டவாறு கூறினார்.

Kerajaan bersetuju memulakan program membaik pulih kawasan merosot di seluruh Malaysia dengan menanam semula 100 juta pokok mulai tahun ini hingga 2025 dalam usaha memulihara kepelbagaian biologi dan perkhidmatan ekosistem negara.

Menteri Air, Tanah dan Sumber Asli Datuk Dr Xavier Jayakumar dalam kenyataan berkata program itu akan dilancarkan pada 21 Mac ini dan kementerian mengalu-alukan penyertaan dan sokongan padu daripada sektor perniagaan dan swasta untuk menjayakannya.

வர்த்தகர்கள், தனியார் அமைப்புகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களைச் சார்ந்த 140 பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மன்றத்தில் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதில் வணிக மற்றும் தனியார் துறைகள் ஆற்றக்கூடிய பங்குகள், பொறுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு இம்மன்றம் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சுற்றுச்சூழல் அமைப்பு சேவையைப் பற்றி முழுமையாக விவாதிக்கிறது. அதோடு பல்வேறு துறைகளில் பல்லுயிர் வளர்ச்சியைக் குறிக்கிறது.

மாநாட்டின் கீழ் வணிக மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைகான உலகளாவிய கூட்டு முயற்சியை ஆதரிப்பதற்காக வணிகங்கள் மற்றும் தனியார் துறை வணிக மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான மலேசிய தளத்தை நிறுவ வேண்டிய அவசியத்தையும் இந்த மன்றம் விவாதித்தது.

2020 மார்ச் 16 முதல் 20 ஆம் தேதிகளில் கொழும்பில் நடைபெற உள்ள மூன்றாவது ஆசியான் பல்லுயிர் மாநாட்டில் இந்தத் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் வழங்கப்படும் என்றும் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.