வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மோஜோவுடன் கைகோர்க்கும் இசைஞானி!! ஒரே மேடையில் இளையராஜா – எஸ்பிபி
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மோஜோவுடன் கைகோர்க்கும் இசைஞானி!! ஒரே மேடையில் இளையராஜா – எஸ்பிபி

கோலாலம்பூர் ஜன. 8-

இசைஞானி இளையராஜாவுடன் மோஜோ கைகோர்த்துள்ளது. இசை நிகழ்ச்சிகளை மலேசியாவில் நடத்தி ரசிகர்களின் மத்தியில் மகத்தான ஆதரவை பெற்றிருக்கும் மோஜோ நிறுவனம் மார்ச் மாதம் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இசைஞானி இளையராஜாவும் பாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரே மேடையில் தோன்றி மலேசிய ரசிகர்களை இசை கடலில் மூழ்கடிக்க வருகிறார்கள்.

இவர்களுடன் பிரபல பின்னணி பாடகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி குறித்த முழு விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என மோஜோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சமூக வலைத்தளங்கள் முழுக்க மோஜோ நிறுவனம் ஏற்பாடு செய்யும் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்த பதிவுகள் அதிகம் பகிரப்படுகின்றன.

மோஜோ இதுவரையில் ஏற்பாடு செய்த அனைத்து இசை நிகழ்ச்சிகளும் மலேசிய இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியும் மலேசியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியின் அறிவிப்புக்காக மலேசிய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மலேசிய ரசிகர்கள் மட்டுமின்றித் தென் கிழக்காசியாவில் உள்ள இசைஞானி இளையராஜா ரசிகர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியாக இது அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன