ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > போதை பொருள் விவகாரம்: அவன் நான் இல்லை
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

போதை பொருள் விவகாரம்: அவன் நான் இல்லை

பெட்டாலிங் ஜெயா ஜன. 13-

நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருளை பயன்படுத்தியதற்காகப் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போலச் சமூக ஊடங்களில் பரவியது.

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதனை அக்கட்சி சார்ந்த ஓர் உறுப்பினர் உறுதிப்படுத்தியதாகவும் ஸ்ரீ ஃபிரி மலேசியா டுடே இணையதளம் கூறியிருந்தது.

ஆனால் டேங்கில் சட்டமன்ற உறுப்பினரான அட்ஹிஸ் ஷான் அப்துல்லா அந்தக் கூற்றை மறுத்துள்ளார். ”நான் தற்போது வீட்டில் இருக்கிறேன்”. ”கூடிய விரைவில் முழு விவரங்களை வெளியிடுவேன்” என அவர் கூறியிருக்கின்றார்.

முன்னதாகச் சீனார் ஹரியான் ஊடகத்திடம் போலீசாரால் கைது செய்யப்பட்ட செய்தியை அவர் மறுத்தார். அதோடு ”இன்ஷா அல்லா நான் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று காலை சமூக வலைத்தளங்களில் வைரலான அந்தச் செய்தியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உட்பட 10 பேர் போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாகப் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கோலாலம்பூரில் டமான்சாராவின் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன