ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > லாட்டரி கிளப்பின் மாணவர் உருமாற்றுத் திட்டத்திற்கு லிம் கோக் விங் பல்கலைக்கழகம் உபகாரச் சம்பளம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

லாட்டரி கிளப்பின் மாணவர் உருமாற்றுத் திட்டத்திற்கு லிம் கோக் விங் பல்கலைக்கழகம் உபகாரச் சம்பளம்

சைபர் ஜெயா ஜன. 13-

லாட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக் அமைப்பின் மாணவர் வாழ்க்கை உருமாற்றுத் திட்டத்திற்கு மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் லிம் கோக் விங் பல்கலைக்கழகம் புத்தாக்க தொழில் திறனில் உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் சைபர் ஜெயா லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தில் கையெழுத்திடப்பட்டது.
லாட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக் 3300 சார்ந்த அதன் ஆளுநர் லியோ செங் லிம் அதன் தலைவர் டாக்டர் சென் குப்தா ஆகியோரை இப்பல்கலைக் கழகத்தின் தலைவர் டான்ஸ்ரீ லிம் கோக் விங்கின் முதன்மை அதிகாரிகள் வரவேற்றனர்.

லாட்டரி காசே திட்டம் பள்ளி மாணவர்களுக்கான மாணவர் வாழ்க்கை மாற்றுத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது. அவர்களுக்கான அறக்கட்டளையின் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு வித்திடுவது தான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

லிம் கோக் விங் பல்கலைக்கழகம் என்பது இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் உன்னதத் தளமாக இருக்கின்றது. கல்வி மட்டுமின்றிப் புத்தாக்கம், கலை வடிவம், பல்லுடகம், படைப்பாற்றல், தகவல், தொடர்பு ஊடகம், ஒளிபரப்பு என வணிக வேளாண்மை உட்பட அனைத்தையும் ஒரே இடத்தில் போதிக்கும் தளமாக இப்பல்கலைக்கழகம் விளங்குகிறது எனக் குப்தா தெரிவித்தார்.

மாணவர் உருமாற்றுத் திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வெள்ளி உபகாரச் சம்பளம் வழங்கியிருக்கும் பல்கலைக்கழகத்திற்குத் தாம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன