ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பொங்கல் சட்டவிரோதமானது! : கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்க கூடாது! கல்வி அமைச்சு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பொங்கல் சட்டவிரோதமானது! : கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்க கூடாது! கல்வி அமைச்சு

புத்ராஜெயா ஜன. 14-

மலேசிய தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் நாளை பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்குத் தயாராகி வரும் நிலையில் மலேசிய முஸ்லிம்கள் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா இலங்கை மலேசியா உட்பட பிற நாடுகளில் தமிழர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பெருநாள் தை பொங்கல். தமிழர் அட்டவணையில் முதல் கொண்டாட்டம் பொங்கலாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அதோடு இது அறுவடைத் திருநாளாகவும் இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

சமயம் கடந்து தமிழர் என்ற இன உணர்வோடு தமிழர்கள் ஒன்றுகூடி இந்தப் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறார்கள். குறிப்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய பொங்கல் விழாக்களை ஏற்பாடு செய்து பலதரப்பட்ட சலுகைகளையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 2012ஆம் ஆண்டு நடந்த தேசிய பொங்கல் விழாவில் 1500 மெட்ரிகுலேஷன் இடங்களையும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளிகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழாக்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக் கூடாது அது முஸ்லிம்களுக்கு சட்டவிரோதமானது  என தேசிய பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதோடு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது இஸ்லாதிற்கு எதிரானது என ஜாகிம் அமைப்புக் குறிப்பிடப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது மலேசியர் என்று ஒற்றுமையை வளர்க்கும் அறிக்கையா? என பலர் சாடி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன