ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கட்சித் தலைவர்கள் முடிவெடுத்தால் பதவி விலகுவேன்! துன் டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கட்சித் தலைவர்கள் முடிவெடுத்தால் பதவி விலகுவேன்! துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் ஜன. 14-

நம்பிக்கை கூட்டணியில் உள்ள 4 முதன்மை கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால் தாம் தற்போது பதவி விலகத் தயாராக இருப்பதாகப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் மலேசிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு 2020 மே மாதம் அப்பதவியை அவர் பிகேஆர் கட்சியின டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பார் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செல்ல விரும்பினால் இப்போதைய சென்றுவிடுவேன்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த விவகாரத்தை நம்பிக்கை கூட்டணியைப் பிரதிநிதிக்கும் 4 முதன்மை கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும். ”நான் பதவி விலக வேண்டுமா? பதவி விலக வேண்டாமா” என்று அவர் வினவினார்.
நம்பிக்கை கூட்டணியில் மகாதீர் தலைமையிலான பெர்சத்து கட்சி, பிகேஆர் கட்சி, ஜனநாயக செயல் கட்சி (டிஏபி), அமானா ஆகியவை உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன