ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ராகா அறிவிப்பாளர் சுரேஷ்- Dr.குணசுந்தரி தம்பதியரின் தித்திக்கும் தலை பொங்கல்
கலை உலகம்

ராகா அறிவிப்பாளர் சுரேஷ்- Dr.குணசுந்தரி தம்பதியரின் தித்திக்கும் தலை பொங்கல்

கோலாலம்பூர், ஜனவரி 17-  

புதுமண வாழ்வில் காலடி எடுத்து வைத்திருக்கும் ராகா அறிவிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் அவரது மனைவி Dr.குணசுந்தரி தங்களது தலை பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். இதற்கு முன்னர் பெற்றோர்களுடனும் வேலையிடங்களிலும் பொங்கலை கொண்டடிய தாம், இவ்வாண்டு தனது மனைவியுடன் பொங்கலை கொண்டாடியது மகிழ்ச்சியான தருணமாக இருந்ததாக சுரேஷ் தெரிவித்தார்.

பொங்கலுக்கு தேவையான பொருட்களை தனது மனைவியுடன் சென்று வாங்கியது, வீட்டில் ஏற்பாடுகள் செய்தது யாவும் தனக்கு புதிய அனுபவமாக இருந்ததாக அவர் அநேகன் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

‘’இந்த ஆண்டோடு  ராகாவில் அறிவிப்பாளராகச் சேர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு நல்ல நாளிலும் உறுதி எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், இவ்வாண்டும் எனக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும். படைக்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைய வேண்டும். சக அறிவிப்பாளர்கள், நண்பர்கள், குடும்ப உறவினர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்றார் சுரேஷ்.

பொங்கல் பண்டிகைக்கு பெரியவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பொங்கல் வைக்கும் நேரம், வீடுகளில் தோரணம், கரும்பு கட்டுவது என நமது கலாச்சாரத்தை பின் பற்றி வருகின்றனர். அதே போன்று, இன்றைய இளைஞர்களும் பொங்கல் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தையும் அதன் சிறப்பையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

தற்போது நவீன காலக்கட்டத்தில் தொழில் நுட்பம் ஒரு பக்கம் இருந்தாலும் பொங்கல் நேரம், வாழ்த்துகளை வாட்ஸ் ஆப் மூலம் பகிர்வது, பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவது என இவைகளில் மட்டுமே மாற்றங்களை காணலாம். நமது கலாச்சாரம், இறை வழிபாடுகள், பண்டிகைகளை மாற்ற முடியாது. அதில் நாம் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும் சுரேஸ் தெரிவித்தார்.

பொங்கலுக்கு பொது விடுமுறை இல்லை என்றாலும் நமது மக்கள் இதற்கென விடுமுறை எடுத்து இந்தப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களது வீடுகளிலேயே பொங்கல் கொண்டாடுகின்றனர். இவற்றை காணும் போது நம் சமுதாயத்தினர் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருந்தாலும் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன