ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சாமிவேலுவின் இரண்டாம் மனைவி விவகாரம்: வேள்பாரியின் விண்ணப்பம் ஒத்திவைப்பு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சாமிவேலுவின் இரண்டாம் மனைவி விவகாரம்: வேள்பாரியின் விண்ணப்பம் ஒத்திவைப்பு

கோலாலம்பூர் ஜன 17-

மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் துன் சாமிவேலுவின் இரண்டாம் மனைவி தாம்தான் என ஒரு பெண்மணி கொடுத்த வழக்கிற்கு எதிராகச் சாமி வேலுவின் புதல்வர் டத்தோஸ்ரீ வேள்பாரி உயர்நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்திற்காக இந்த விண்ணப்பத்தின் விசாரணை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் துணை பதிவாளர் கூறியிருப்பதை மரியம் ரோஸ்லின் வழக்கறிஞர் ரமேஷ் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

நீதிபதி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தமது வாடிக்கையாளருக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக வழக்கறிஞர் ரமேஷ் கூறியிருக்கின்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மரியம், துன் சாமிவேலு, டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோருக்கு எதிராக ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். துன் சாமிவேலு குடும்பத்தில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதோடு குடும்பத்தில் ஒருபகுதியாகத் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கூறியிருந்தார். அதோடு தாம் துன் சாமிவேலுவை சந்திப்பதற்கு வேள்பாரி உட்படக் குடும்ப உறுப்பினர்கள் தடை விதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

2017 ஆம் ஆண்டுத் துன் சாமிவேலுவின் நிதி நிர்வாகங்களை வேள்பாரி கவனித்துக்கொண்டார். அதன் பிறகு தமக்கு எந்தச் சலுகையும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட 59 வயதான மரியம் 1981ஆம் ஆண்டுத் தொடங்கிச் சாமிவேலுவுடன் தம்முடைய வாழ்க்கையைத் தொடர்ந்து வந்ததாகவும் அதற்கான ஆதாரங்களையும் ஈப்போ நீதிமன்றத்தின் முன் செய்தியாளர்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார்.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்படாததால் தாம் கடன் பட்டதாகவும் மரியம் குறிப்பிட்டார். இந்நிலையில் வாழ்க்கை செலவின தொகை RM191,107.35 வழங்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் டத்தோ ஸ்ரீ வேள்பாரியின் வழக்கறிஞர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மரியத்தின் வழக்கு முன்னுதாரணமாக இருக்க ஸ்டே ஆர்டரை தாக்கல் செய்தார். முன்னாள் பொதுப்பணி அமைச்சருமான துன் சாமிவேலு (வயது 82) மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பதை உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

சாமி வேலுவின் மனநலத்தைத் தீர்மானிக்க மனநல சட்டம் பிரிவு 52 இன் கீழ் விசாரணை கோரி வேள்பாரி கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு அல்சைமர் நோய் காரணமாக அவர் மனநலம் திக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு சட்ட வழக்குகளில் தன்னைத் தற்காத்துக்கொள்ள மனரீதியாக அவர் தகுதியற்றவர் என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 18ஆம் தேதி செவிமடுக்கப் படம் இருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன