ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பொங்கல் சட்டவிரோதமானதா? கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்! – அமைச்சர் முஜாஹித்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பொங்கல் சட்டவிரோதமானதா? கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்! – அமைச்சர் முஜாஹித்

நிபோங் தெபால், ஜன. 17-

இஸ்லாமிய மேம்பாட்டுப் பிரிவு (ஜாகிம்) ஆலோசனையின் கீழ் இஸ்லாத்தில் பொங்கல் பண்டிகை சட்டவிரோதமானது (ஹராம்) என்று சுற்றறிக்கை வெளியிட்ட கல்வி அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய விவகார பிரிவு அமைச்சர் முஜாஹித் யூசுப் ரவா தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அறுவடை விழாவில் கலந்து கொள்வது ஹராம் என்று ஜாகிம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடிக்கப் பட்டிருக்கும் வரை முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்பது அனுமதிக்கப்படுகிறது என்றுதான் கூறப்பட்டிருந்தது.

நிபோங் தெபாலில் உள்ள ஒரு பள்ளியில் என் மனைவி பணிபுரிகிறார். அங்குப் பல இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். பல ஆண்டுகளாக இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து அவரது பள்ளியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்று வருகிறார் என்று அவர் இங்குள்ள ஆறுமுகம்பிள்ளை தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜாகிம் அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கத்தைக் கல்வி அமைச்சின் அதிகாரி எப்படி மாற்ற முடியும் என முஜாஹித் கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமிய நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் வரை பொங்கல் அனுமதிக்கப்படுகிறது என நாங்கள் கூறிய கருத்தை மாற்றி நீங்கள் எந்த அடிப்படையில் ஹராம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள் என அவர் வினவினார்.

இதன் தொடர்பில் ஜாகிம் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி உள்ளது இதனால் கடிதத்தை எழுதியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன