ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > யூசுப் ராவுத்தர் மீது அவதூறு வழக்கு! – ராம் கர்பால் சிங்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

யூசுப் ராவுத்தர் மீது அவதூறு வழக்கு! – ராம் கர்பால் சிங்

பெட்டாலிங் ஜெயா ஜன. 17-

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் முகமட் யூசுப் ராவுத்தர் மீது பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கை தாக்கல் செய்வார் என்று வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.

”இந்த வழக்கை தாக்கல் செய்ய அவரிடமிருந்து நான் அறிவுறுத்தலை பெற்றுள்ளேன்.” ”அடுத்த வாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்றார் அவர்.

தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தமது முன்னாள் முதலாளியான அன்வார் இப்ராகிம் வரவேற்பதாக யூசுப் ராவுத்தர் கூறியிருந்தது குறித்துக் கருத்துரைத்த ராம் கர்பால் சிங் மேற்கண்டவாறு கூறினார்.

அன்வார் என் மீது வழக்கு தொடுக்க விரும்புகிறாரா? முன்னெடுக்கலாம் என்று யூசுப் ராவுத்தர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக அன்வார் தம்மைப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ராவுத்தர் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன