ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மகிழம்பூ அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்  பொங்கல் குதுகலம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

மகிழம்பூ அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்  பொங்கல் குதுகலம்!

ஈப்போ, ஜன. 17-

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஈப்போ மகிழம்பூவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விஜா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பக்தர்கள் ஒன்றிணைந்து முப்பானைகளில் மூன்று வகையான பொங்கல்கள் வைத்து அம்பாளுக்குப் படைத்தனர். சிறப்புப் பூஜை நிறைவுற்றதும் பல்வேறு சுவாரசியமான போட்டி விளையாட்டுகள் பக்தர்களுக்காக நடத்தப்பட்டன.

சிறார்களுக்கான லட்டு சாப்பிடும் போட்டி, இசை நாற்காலி, சற்று பெரிய பிள்ளைகளுக்குக் கரும்பு சாப்பிடும் போட்டி, பெண்களுக்குப் பூ காட்டும் போட்டி, இளைஞர்களுக்குக் கூந்தல் பின்னும் போட்டி, தம்பதியருக்கான கோலம் போடும் போட்டி மற்றும் மூத்த சந்ததியினருக்கிடையில் உறியடிக்கும் போட்டி என வரிசையாக ஒவ்வொன்றாய் மிகவும் கலகலப்புடன் நடந்தேறின.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் அவர்கள் விழாவிற்குச் சிறப்பு வருகை புரிந்திருந்தார். அவரின் சிறப்புரையில் “விழா மிகவும் மகிழ்ச்சியளித்ததாகவும், இப்படியான விழாக்கள் எல்லா ஆலயங்களிலும் நடைப்பெற வேண்டுமெனத் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிடடார். அதனோடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படட இந்தப் பொங்கல் விழாவின் செலவுகளை நிபர்த்திசெய்ய ரி.ம.2000-யை தனது சேவை மையம் சார்பாக வழங்குவதாக வாக்களித்தார்.

தொடர்ந்து சிவக்குமார் தமது திருக்கரங்களால் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. விழா அன்னதானத்துடன் பூர்த்தியடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன