ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 19-

பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில், கேளிக்கை விளையாட்டுக்களுடன் கூடிய பொங்கல் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் சி.சங்கா தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் ஆதரவோடும் நடைபெற்ற இந்த உன்னத நிகழ்ச்சியில், வட்டார இடைநிலைப் பள்ளி மாணவர்களும் சீன தொடக்கப் பள்ளி மாணவர்களும் சிறப்பு பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் சுயமாகப் பொங்கலிடும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பயிற்சி அளிக்கப்பட்ட வேளையில், தைத் திருநாள் பற்றிய விளக்கங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழர் பாரம்பரியப் பெருமையை பறைசாற்றும் விளையாட்டுகளும், பிற மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவற்றை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

பாரம்பரியப்படி அனைவருக்கும் வாழை இலைகளில் சைவ உணவு பரிமாறப்பட்டது. விமரிசையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோர்களும் சுற்று வட்டாரப் பொது மக்களும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.

தைப் பொங்கல் வைபவம் பொங்கலிடுவது மட்டுமே என்பதோடு நின்று விடாமல், அத்திருநாளை அறிவியல் சார்ந்த அம்சங்களுடன் எடுத்துரைக்கும் விதமாக, பல்லின மாணவர்களுக்கு கேளிக்கை ஞானக் கல்வியை புகட்டுவதை  தலையாய நோக்கமாகக் கொண்டு, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, பள்ளி தலைமையாசிரியர் சங்கா கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன