ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > திரையரங்கை மிரட்ட வருகிறது தமிழர் தயாரித்த ஹாலிவுட் திரைப்படம்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

திரையரங்கை மிரட்ட வருகிறது தமிழர் தயாரித்த ஹாலிவுட் திரைப்படம்!

கோலாலம்பூர் ஜன. 20-

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான டெல்.கே. கணேசன் தயாரித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் ”டெவில்ஸ் நைட்”. மேற்கத்திய நாட்டின் முதன்மை தொழில் அதிபரான இவர் திரை உலகின் மீது தீவிர காதல் கொண்டவர். அதனடிப்படையில் இந்த ஹாலிவுட் திரைப்படத்தை அவர் தயாரித்திருக்கிறார்.

பழமை வாய்ந்த ஒரு கத்தியையும் ராட்சச மிருகத்தையும் மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திகில் திரைப்படத்தில் தமிழக முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நெப்போலியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

80.90ஆம் ஆண்டுகளில் கதாநாயகனாக வலம் வந்த நெப்போலியன், போக்கிரி தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தனது நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் அவர் மிகச் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஷாம் லோகன் இயக்கியுள்ளார். மலேசிய ரசிகர்கள் உள்ளூர் திரைப்படம் உட்படத் தமிழகத் திரைப்படத்திற்கு மகத்தான ஆதரவை வழங்கி வருகிறார்கள். இந்தியாவைத் தவிர்த்து திரை உலகிற்கு மிகப்பெரிய வர்த்தகத் தலமாக மலேசியா விளங்குகின்றது.

அந்த அடிப்படையில் தான் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை மலேசிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் இங்கு வந்திருப்பதாகத் தயாரிப்பாளர் டெல் கே கணேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மே மாதம் உலகம் முழுவதும் வெளியீடு காணவிருக்கும் டெவில்ஸ் நைட் திரைப்படத்தின் பிரத்தியேக காட்சி மலேசிய ஊடகவியலாளர்களுக்குத் திரையிடப்பட்டது. இதைப்பார்த்த பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் இப்படம் வெற்றி பெரும் எனத் தங்களின் கருத்தை வெளியிட்டனர்.

இதனிடையே மலேசியாவில் பல திறமை வாய்ந்த தமிழ் நடிகர்கள் இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களைக் கொண்டு கூடிய விரைவில் மதிய திரைப்படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன