ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள்! – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள்! – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா, ஜன. 21-

3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாட்டின் (ஏசிபி 2020) முன்னோட்ட தொடக்க விழா இன்று விமர்சையாக நடந்தது. நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இதனை முன்னின்று வழி நடத்திய வேளையில் இந்நிகழ்ச்சியில் ஆசியான் பல்லுயிர் மையத்தின் நிர்வாக இயக்குனர் தெரேஷா முண்டிதா எஸ். லிம், உட்படத் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் கொரியா தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட மலேசியாவிற்கான வெளிநாட்டு தூதர்களும் பங்கேற்றனர்.

”2050 இயற்கையுடன் சுபிட்சமான வாழ்க்கை” என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு மார்ச் மாதம் 16ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. ஏசிபி 2020 அமைப்புடன் இணைந்து நீர், நிலம், இயற்கை வள அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது என டாக்டர் சேவியர் குறிப்பிட்டார்.

KUALA LUMPUR, Jan 21 – Approximately 500 participants are expected to take part in the third edition of the ASEAN Conference on Biodiversity (ACB 2020) from March 16 to 20 at the Kuala Lumpur Convention Centre (KLCC).

Water, Land and Natural Resources Minister Datuk Dr Xavier Jayakumar said the participants would those from ASEAN member states and 20 megadiverse countries in South America and Africa that harbour more than 70 per cent of the global biodiversity.

இந்த மாநாட்டில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிய நிலையில் 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்வார்கள். பல்லுயிர் பெருக்கத்தில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் இதில் அதிகமாகக் கலந்து கொள்கிறார்கள்.

இம்மாநாட்டில் ஏசிபி 2020 உடன் இணைந்து ஆசியான் நாடுகளின் பல்லுயிர் மேலாண்மை தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. அதோடு பல்லுயிர் சார்ந்த கண்காட்சி கூடங்களும் அமைக்கப்படும் என டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பகுதிகள் தொடர்பான இலக்குகள் அடையாளம் காணப்படும். அதோடு 2050 ஆம் ஆண்டளவில் ஆசியா நாடுகளின் பல்லுயிர் நிர்வாகத்தில் இலக்கை அமைப்பதற்கும் ஒரு தளமாக இது அமைகின்றது.

இதன் முன்னோட்ட தொடக்கவிழாவில் இந்த மாநாட்டிற்கான சின்னத்தையும் வலைதளத்தையும் நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் தொடக்கி வைத்தார். தமது உரையில் இந்த மாநாட்டின் நோக்கத்தையும் எதிர்காலத் திட்டமிடலும் எவ்வளவு முக்கியம் என்பதை டாக்டர் ஜெயக்குமார் விளக்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன