ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு
கலை உலகம்

தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு

கோலாலம்பூர், ஜன.23-

ராகாவின் கலக்கல் காலை சுரேஷ் மற்றும் அகிலா, மலேசிய அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 மாற்றுத் திறனாளி பக்தர்களை பத்துமலை திருத்தலத்தின் உச்சிக்குத் ஏந்திச் சென்றனர்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ராகா அறிவிப்பாளர்கள், சுரேஷ் மற்றும் அகிலா ஆகியோர் தமிழன் உதவும் கரங்கள் தோற்றுநர் சமூக சேவகர், அ. முரளியுடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுப்பட்டனர். சுமார் 250 தமிழன் உதவும் கரங்கள் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமரச் செய்து 272 படிகளை சிரம் பாராமல் கடந்து அவர்களின் நேர்த்திக்கடனையும் பிராத்தனையையும் எந்த ஒரு தடையுமின்றி செவ்வனே நிறைவேறச் செய்தனர் தன்னார்வலர்கள்.

இவ்வருட திருப்பணியை சிலாங்கூர் மாநில ஆட்ச்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.பிரபாகரன் உட்பட மனிதநேய மாமணி இரத்னவள்ளி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 பக்தர்களுக்கு உதவும் பொருட்டு இத்திருப்பணியை மேற்கொள்வதில் ராகா மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான, ராகா மேலும் அதிகமான மலேசியர்களை இணங்குவதை எதிர்பார்பதோடு அவர்களுக்குச் சாதகமான நேர்மறை தாக்கத்தை வழங்குவதையும் உறுதி கொள்கிறத என ராகாவின் உள்ளடக்க மேலாளர் சுப்ரமணியம் வீராசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன