ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு
சமூகம்

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு

பினாங்கு, ஜனவரி 24-

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பாக பணமுடிப்பு வழங்கப்பட்டது.

மாநிலத்தின் ஒரு செல்வந்தராகவும் தொழில் முனைவராகவும் திகழும், ரிச்சர்ட் ஓங் என்பவர், இப்பள்ளி மாணவர்களுக்கு இந்த பண அன்பளிப்பை வழங்கினார்.

பள்ளியில் தலைமையாசிரியர் சி.சங்கா, கடந்த 3 ஆண்டுகளாக சுங்கை அரா தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது, அப்பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் அர்ப்பண உணர்வுடன் சேவையாற்றியிருந்ததை ரிச்சர்ட் ஓங் முன்னதாகவே நன்கறிந்திருந்தார்.

இதன் பொருட்டு அவரது தலைமையாசிரியர் பொறுப்புணர்வால் ஈர்க்கப்பட்டு, சங்கா பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு பணியிட மாற்றலாகி வந்தவுடன், அவரை நேரில் சந்தித்த ரிச்சர்ட் ஓங், அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்திப்பின் போது தனது அன்பையும் ஆதரவையும் வெளிக் காட்டும் விதமாக, சங்கா தற்போது தலைமையாசிரியராகப் பணி புரியும் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு தொடர்பில் பண முடிப்பு வழங்கிட ஆவல் கொண்டிருப்பதை ரிச்சர்ட் ஓங் அவரிடம் எடுத்துரைத்தார்.

மாணவர் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தாராள உணர்வுடன் மனமுவந்து அன்பளிப்பு வழங்கிய ரிச்சர்ட் ஓங்ஙிற்கு, தலைமையாசிரியர் சங்கா நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன