ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கொரோனா கிருமி குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்! டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

கொரோனா கிருமி குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்! டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா ஜன. 28-

உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா கிருமி குறித்து வதந்திகள் பரப்பப்படுகிறது நிறுத்தப்பட வேண்டுமென நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதிரியான வதந்திகள், பொய் செய்திகள் மக்களின் அமைதியை சீர்குலைத்துவிடும். இந்தக் கொரோனா கிருமி மலேசியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனப் பலர் சமூக வலைத்தளங்களில் பொய்யுரைத்து வருவதையும் அமைச்சர் சாடினார்.

இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து செய்திகளையும் நம்பிவிடக்கூடாது. அதில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

முன்னதாக இந்தக் கொரோனா கிருமி குறித்த செய்திகளுக்கும் நடப்பு விவகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்குச் சுகாதார அமைச்சின் அதிகாரபூர்வ இணையதளத்தையும் சமூகத் தளத்தையும் மக்கள் வலம் வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு அரசாங்கம் வெளியிடும் தகவல்களைத் தொலைக்காட்சி வாயிலாகவும் மக்கள் அறிந்து கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.

வதந்திகள் பரப்பப்பட்டுவது எந்தவகையிலும் நன்மையைக் கொண்டு வராது. இதனால் மக்களுக்குத் தேவையற்ற பயமும் பாதிப்பும் உருவாக வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாகச் செக்சன் 505 (பி) பிரிவின் கீழ் தவறான தகவல்களைப் பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது என நீர் நிலம் இயற்கைவள அமைச்சு தமது அதிகாரத்துவ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அபராத தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன