செர்டாங், பிப். 1-

பெனாராஜூ இன்கீான் இயக்கத்தின் தலைவர் கேப்டன் செல்வக்குமார் ஆதரவில் செர்டாங்கில் 3ஆம் ஆண்டு பெனால்டி கிக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

செர்டாங் இளையோர் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் செர்டாங் மார்டி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 64 குழுக்கள் களமிறங்கவுள்ளன.

கேப்டன் செல்வக்குமார் ஆதரவில் இந்த பெனால்டி கிக் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியின் மொத்த பரித் தொகையாக 7,500 வெள்ளியை கேப்டன் செல்வக்குமார் வழங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளார்  என்று செர்டாங் இளையோர் சமூக நல இயக்கத்தின் தலைவர் கமல்நாத் முனியாண்டி கூறினார்.

இந்த பெனால்டி கிக் போட்டியில் வெற்றி பெறும் முதல் அணியினருக்கு 4,000 வெள்ளியும் வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2,000 வெள்ளியும் மூன்றாவது இடத்தை 1,000 வெள்ளியும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணைக்கு 500 வெள்ளியும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இளையோர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பெனால்டி கிக் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான குழுக்கள் பங்கேற்பது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி. அதே வேளையில் இப்போட்டியின் வாயிலாக கிடைக்கும் பணத்தில் செர்டாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களும் வாங்கி தரப்பட உள்ளது என்று கமல்நாத் முனியாண்டி கூறினார்.

இந்திய இளைஞர் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்போட்டிக்கு பெனாராஜூ இன்கீான் இயக்கம்  முழு ஆதரவை வழங்கியுள்ளது.

வரும் காலங்களில் இளையோரை மேம்படுத்தும் திட்டங்களையும் மேற்கொள்ள சங்கம் இலக்கு கொண்டுள்ளதாக கேப்டன் செல்வக்குமார் கூறினார்.