ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ரேப் போர்களம் : 16 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ரேப் போர்களம் : 16 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியை 22 பிப்ரவரி முதல் இணையதளம் வாயிலாக, ஆஸ்ட்ரோ உலகம், ஆஸ்ட்ரோ கோ மற்றும் தொலைக்காட்சியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

கோலாலம்பூர், 31 ஜனவரி 2020 – இம்மாத தொடக்கத்தில் நடைப்பெற்ற RAP Porkalam, மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியின் நேர்முகத்தேர்வில் பங்கேற்பாளர்களிடையே நிகழ்ந்த கடுமையான போட்டிக்குப் பின்னர், சுமார் 16 திறமைமிக்க ராப் போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

ஆஸ்ட்ரோ உலகம் வலைத்தளம் வழியாக சிறந்த 16 போட்டியாளர்களில் தங்களுக்கு விருப்பானவர்களுக்கு மலேசியர்கள் ஒரு நாளைக்கு 50 வாக்குகள் விகிதத்தில் இனிதே வாக்களிக்களாம்.

முதல் சுற்றுக்கான வாக்களிப்பு தற்பொழுது திறக்கப்பட்டிருக்கின்ற வேளையில் மலேசியர்கள் பிப்ரவரி 4 வரை வாக்களிக்களாம்; இரண்டாம் சுற்றுக்கான வாக்களிப்பு 19 முதல் 25 பிப்ரவரி வரையிலும்; மற்றும் Wild Card சுற்றுக்கான வாக்களிப்பு 18 முதல் 24 மார்ச் வரை திறக்கப்படும் வேளையில் ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.

RAP Porkalam -த்தில் முதல் நிலையில் வாகை சூடுபவர் சுமார் ரி.மா 5000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசை சிங்களை வெளியீடு காணும் ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார். அதே வேளையில், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுபவர் சுமார் ரி.மா 2000 ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு அவரது விருப்பத்திற்கு இணங்க Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசை சிங்களை வெளியீடு காணும் வாய்ப்பு வழங்கப்படும்.

(குறிப்பு: போட்டியாள்களை பற்றிய மேல் விபரங்களுக்குப் பின் இணைப்பை பார்க்கவும்)

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்தஸ் கூறுகையில், மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியில், பிரபல உள்ளூர் ராப்பர் எம்ஸி ஜெஸ் வழிகாட்டவிருக்கும் முதல் 16 திறன்மிக்க போட்டியாளர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்வதோடு பேரின்பமும் அடைகிறோம்.

உள்ளூர் சமூகத்தையும் மலேசிய தமிழ் இசைத் துறையையும் மேம்படுத்துவதோடு வளரச்செய்யவும் RAP Porkalam ஒரு சிறந்த அடித்தளமாக இருக்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறோம். நேர்முகத்தேர்வின்போது அளவற்ற ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நாங்கள் தலை வணங்குவதோடு நன்றி மலர்களையும் சமர்ப்பிக்கின்றோம், மேலும் மலேசியர்களிடமிருந்து அதீத ஆதரவைப் RAP Porkalam தொடர்ந்து பெறும் என்பதை நாங்கள் பெரிதும் எதிர்ப்பாரக்கிறோம். ”

தராகை, RAP Porkalam -த்தின் 24 வயது போட்டியாளர் கூறுகையில்,”ராப் மீதான காதல் மற்றும் தாக்கம் எனக்குள் எப்போதும் இருந்ததுண்டு, பாடல்களை இயற்றுவது மற்றும் பாடல் வரிகளை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் எப்போதும் நான் ஆர்வம் காட்டி வந்தேன், அதுமட்டும்மின்றி ஒரு நாள் இத்துறையில் இளம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் ஆவா”.

நரேன் ஜாக், RAP Porkalam -த்தின் 20 வயது போட்டியாளர் கூறுகையில்,” முதல் பாடலை 16 வயதிலும், முழு நீள மிக்ஸ்டேப்பை 18 வயதிலும் நான் பதிவு செய்தேன். ராப்பராக மகுடம் சூட வேண்டும் என்ற எங்களைப் போன்ற இளைய தலைமுறையினரின் கனவை நினைவாக்க RAP Porkalam ஒரு தலைச்சிறந்த தளமாக அமைகின்றது என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை”.

RAP Porkalam-த்தை அனைவரும் பிப்ரவரி 22 முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளில், இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்வதோடு விண்மீன் HD (அலைவரிசை 231)-இல் கண்டு களியுங்கள். மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் சமூக வலைத்தலங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன