ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசியர்கள் இவ்வருட தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசியர்கள் இவ்வருட தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்

கோலாலம்பூர், பிப் 5, பிப்ரவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் மலேசியர்கள் ஆன்லைனில் ஆஸ்ட்ரோ உலகம் வாயிலாக இவ்வருட தைப்பூச நேரலையை ஸ்ட்ரீம் செய்யலாம்.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் பிப்ரவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் ஆஸ்ட்ரோ கோ செயலியின் வழி வானவில் (அலைவரிசை 201) மற்றும் துல்லிய அலைவரிசையான விண்மீன் எச்டி (அலைவரிசை 231) ஆகியவற்றில் தைப்பூச நேரலை ஒளிப்பரப்பை ஸ்ட்ரீம் செய்து இவ்வருட தைப்பூசத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடலாம். இவ்வருட நேரலை ஒளிபரப்பு ஈப்போ, பினாங்கு மற்றும் சுங்கை பெட்டானியில் அமைந்துள்ள பிரபல ஆலயங்களிலிருந்து இடம்பெரும்.

தங்களுக்கு விருப்பமான தைப்பூசப் புகைப்படங்கள் ஆஸ்ட்ரோ உலகம் நேரலையில் இடம் பெற வேண்டும் என எண்ணும் மலேசியர்கள் அவ்வறிய வாய்ப்பினை தன்வசமாக்க அப்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் #VelVel என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இவ்வருட தைப்பூசத்தை மேலும் மெருகூட்ட பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். அவை பின்வருமாறு:  மருத்துவ நிபுணர், டாக்டர் ஜெயா பாலன் வள்ளியப்பன் மற்றும் மலேசிய சைவ நற்ப்பணி கழகத் தலைவர், தர்மலிங்கம் நடராஜன் விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கும் அருணகிரிநாதரின் திருப்புகழை முக்கிய கருவாக கொண்ட பேச்சு நிகழ்வை ரேவதி மாரியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்வை வானவில் (அலைவரிசை 201) மற்றும் விண்மீன் எச்டி (அலைவரிசை 231) ஆகியவற்றில் கண்டு ரசிக்களாம்.

துணைவன், திருவருள், தைப்பூசம், கந்தர் அலங்காரம் போன்ற திரைப்படங்களை வெள்ளித்திரையில் (அலைவரிசை 202) கண்டு களிக்களாம்.

‘காவடி ஏந்துபவரின் ஒரு பயணம்’ எனும் மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகாவின் தைப்பூச பிரத்தியேக ஆவணப்படத்தை ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம், சமூக ஊடக தளங்கள் மற்றும் SYOK செயலின் வாயிலாக மலேசியர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம். அதுமட்டும்மின்றி, ராகா அறிவிப்பாளர்கள் பத்துமலை, பினாங்கு, ஈப்போ மற்றும் ஜொகூர் பாரு ஆகிய இடங்களிலிருந்து அவ்வப்போது இடம் பெரும் தைப்பூச கொண்டாட்டங்களின் சிறப்பு விபரங்களை நேரலையாக ராகாவில் பகிர்ந்து கொள்வர். மலேசியர்கள் தங்களது மகிழ்ச்சியான தைப்பூச தருணங்களை இன்ஸ்டாகிராமில் #raagavel2020 என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்வதன் மூலம் பிப்ரவரி 9 வரை பிரத்தியேக ராகா பொருட்களை வெல்லும் அறிய வாய்ப்பைப் பெறலாம்.

(குறிப்பு: நேரலை ஸ்ட்ரீமிங் மற்றும் திரைப்படங்களைப் பற்றிய மேல் விபரங்களுக்கு பின் இணைப்பைப் பார்க்கவும்) மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோவின் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன