ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மின்னல் பண்பலையில் இன்று இரவு மணி 10.15-க்கு.. “விடியல்”
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மின்னல் பண்பலையில் இன்று இரவு மணி 10.15-க்கு.. “விடியல்”

4ஆம் தொழிலியல் புரட்சியை நோக்கி நாம் வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு கல்வித் துறையிலும், வேலை சந்தையிலும் புத்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன.

தொழில்நுட்ப பயிற்சிகளை கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கின்றது. மாற்றங்களுக்கு நிகராக நம் இளைஞர்களும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அரசாங்கத்தின் இந்த உன்னத நோக்கத்திற்கு வழி வகுத்து தருகின்றது ‘JOM TVET’ இயக்கம்.

இந்த இயக்கத்தை மேலும் வெற்றியடையச் செய்ய கைக் கோர்க்கிறது மின்னல் பண்பலை. புதன் கிழமைகளில் இரவு மணி 10.15 முதல் 10.45 வரை “விடியல்” நிகழ்ச்சி மின்னல் பண்பலையில் ஒலிபரப்பாகி வருகின்றது. இளையோர் மட்டுமல்லாது பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பல பயனுள்ள தகவல்களை தாங்கி மலர்கின்றது “விடியல்”.

இன்றைய நிகழ்ச்சியில் ILP கூச்சாய் லாமா அரசாங்க தொழில்திறன் பயிற்சி மைய மாணவர்கள் நவீன் குமார் செல்வம், கலா பரசுராமன், நிமலேந்திரன் ரமேஷ் ஆகியோர் தங்களின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். இணைந்திருங்கள் இன்று இரவு மணி 10.15க்கு “விடியல்”. இளையோர்களுக்கான எதிர்காலம் இந்த விடியலில் செதுக்கப்படுகின்றது. அறிவிப்பாளர் மோகனின் வழி நடத்துதலில் இந்நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகின்றார் நளினி அச்சுதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன