ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பாஸ் ஆதரிப்பதை வரவேற்கிறேன்! துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பாஸ் ஆதரிப்பதை வரவேற்கிறேன்! துன் மகாதீர்

சைபர் ஜெயா பிப். 10

பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தமக்கு ஆதரவாகப் பாஸ் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கும் நம்பிக்கை தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது எனக் கூறினார். ஆனால் அத்தகைய ஆதரவை தாம் வரவேற்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

நான் ஏற்கனவே பிரதமராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை ஆதரிக்க விரும்பினால் நன்றி என்று அவர் இன்று பிரஞ்சு வணிகச் சமூகத்துடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் மகாதீரின் தலைமை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக பாஸ் கட்சி கூறியிருக்கின்றது. மக்களவையில் மகாதீருக்கான ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதி படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர் சச்சரவுகளைத் தவிர்க்கும் என்றும் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மேன் கூறினார்.

இது குறித்து கேட்டபோது; பாஸ் கட்சியின் ஆதரவை தாம் வரவேற்பதற்காக மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன