ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > குழந்தை வதை : தம்பதியருக்கு 7 நாள் தடுப்புக்காவல்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

குழந்தை வதை : தம்பதியருக்கு 7 நாள் தடுப்புக்காவல்

புக்கிட் மெர்தாஜம், பிப். 10-

11 வயது மகளைச் சித்திரவதை செய்த தம்பதியினரை விசாரிப்பதற்குப் போலீஸ் செய்திருந்த விண்ணப்பத்தை இங்குள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதித்தது.

சிறுவர் சட்டம் 2001 பிரிவு 31 (1) இன் கீழ் விசாரணையை மேற்கொள்ள அந்தத் தம்பதியருக்கு 7 நாள் தடுப்புக்காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை உதவி பதிவாளர் நோர் அபிபா அப்துல்லா அனுமதித்தார். இந்தத் தடுப்புக்காவல் இன்று தொடங்கிப் பிப்ரவரி 16-ஆம் தேதி வரை நீடிக்கும்.

இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடுமையாகத் தாக்கப்பட்ட குழந்தையும் அவரது தம்பி (வயது 8) அடங்குவர் எனப் போலீஸ் தெரிவித்தது. அதோடு தந்தையின் இரண்டாவது மனைவிக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் முறையே 19, 17, 16, 14, 11, 8 வயதுடையவர்கள் எனப் போலீஸ் உறுதிப்படுத்தியது.

அதோடு கைதுசெய்யப்பட்ட அக்குழந்தையின் தந்தை போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய செபராங் பிராய் போலீஸ் படைத் தலைவர் நீக் ரோஸ் ஹஸன் நிக் அப்துல் ஹமீத் உறுதிப்படுத்தினார்.

அதோடு இதர எட்டுக் குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் தாங்கள் கண்டறியவில்லை என்றார் அவர்.

மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் கொண்டு தாக்கப்பட்ட 8 வயது சிறுமி கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

அந்தப் பெண் குழந்தை மீட்கப்பட்டுச் செபராங் ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது சிறுமி கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்பட்ட தாகவும் கூறப்பட்டது. இது குறித்துச் சமூக வலைதளங்களில் பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன