ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 2020 மலேசிய பல்லுயிர் பெருக்கத்திற்கான மைல்கல்! டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்முதன்மைச் செய்திகள்

2020 மலேசிய பல்லுயிர் பெருக்கத்திற்கான மைல்கல்! டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர் பிப். 12-

தேசிய பல்லுயிர் மையத்தை உருவாக்குவது மற்றும் வனவிலங்குகள் உட்பட காடுகளின் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்களை மறு ஆய்வு செய்வதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்திற்கான மைல்கல்லாக 2020 ஆம் ஆண்டு விளங்கும் என நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இவ்வாண்டு பல்லுயிர் பெருக்கத்திற்கான 3ஆவது ஆசிய மாநாட்டை மலேசியா ஏற்று நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இஃது உலகளாவிய மற்றும் பல்லுயிர் இலக்குகளை மேம்படுத்தும் என்பதோடு மலேசியாவிற்கு மிகப்பெரிய பெருமையைக் கொண்டுவரும் என்றார் அவர்.

பல்லுயிர் மையம் அமைக்கப்படுவது குறித்துப் பலமுறை பேசப்பட்டது. ஆனால் அது நிறுவப்படவில்லை. எவ்வாறாயினும் இப்போது மையத்தை உருவாக்க ஓர் ஒதுக்கீட்டை நாம் கொண்டிருக்கின்றோம். இந்தப் பல்லுயிர் மையம் பந்திங் வெட்லண்ட்ஸ் பாயா இண்டாவில் அமைக்கப்படுவதற்கான தளமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை உருவாக்குவதற்குத் தனியார் துறையுடன் தாங்கள் பணியாற்றி வருவதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

KUALA LUMPUR: Year 2020 is set to be the landmark year for the country’s biodiversity with the establishment of the National Biodiversity Centre and the review of laws relating to the protection of wildlife and forests taking centre stage.

மலேசியா ஒரு மிகப்பெரிய பல்லுயிர் நாடு. தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உலகின் மிகத் தனித்துவமான உயிரினங்களின் தாயகமாகவும் மலேசியா விளங்குகின்றது. நாம் தொடர்ந்து புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்து வருகின்றோம். அதோடு தங்களின் பல்லுயிர் பற்றிய தேடலை அதிகரிக்கும் முயற்சியில் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்க இந்த மையம் உதவும் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் வளமான பல்லுயிர், பல்லுயிர் ஆராய்ச்சி, பொது விழிப்புணர்வு அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேசிய பல்லுயிர் மையம் முதன்மையாக விளங்கும்.

மலேசியாவில் பாதுகாக்கப்பட்ட சில வனப்பகுதிகள் உள்ளன. இதே போன்ற புவியியல் தளங்களை அமைப்பதில் ஆர்வம் உள்ள மாநிலங்களில் ஜொகூர், கெடா, பெர்லிஸ், மற்றும் லாபுவான்ஆகியவை அடங்கும் என்றார் அவர். முன்னதாகத் தாம் அமைச்சராகப் பதவி ஏற்றது முதல் சட்ட திருத்தங்களை ஆராய்வதே தமது திட்டம் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல சட்டங்களை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716), மற்றும் தேசிய வனவியல் சட்டம் 1984 ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். காடுகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பான குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாகுவதுதான் இந்த மறுபரிசீலனையின் நோக்கமாகக் கொண்டுள்ளதாக் அவர் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் முறையே மார்ச் மற்றும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற அமர்வுகளில் தாக்கல் செய்யப்படும் என்பதையும் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உறுதிப்படுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன