ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > F1 பந்தையம்: ஃபெராரியின் புதிய கார் அறிமுகம்
உலகம்முதன்மைச் செய்திகள்

F1 பந்தையம்: ஃபெராரியின் புதிய கார் அறிமுகம்

இவ்வாண்டு F1 கார் பந்தைய போட்டியில் பங்கேற்க ஃபெராரி குழு தனது புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புதிய காருக்கு SF1000 என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கார் பந்தையங்களில் ஃபெராரி 999 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. அடுத்த வெற்றி 1000 என்ற கணக்கை மையமாக வைத்து இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு கிமி ரேய்க்கோனன் மூலம் ஃபெராரி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு வெற்றியையும் ஃபெராரி பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன