ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கொரோனா நோய்க்கு புதிய பெயர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கொரோனா நோய்க்கு புதிய பெயர்

கோலாலம்பூர், பிப்ரவரி 12-

உலகளவில் பரவி வரும் கொரோனா நோய்க்கு உலக சுகாதார நிறுவனமான WHO, COVID19 என பெயர் மாற்றம் செய்துள்ளது.

இந்த உயிர் கொல்லி நோய் இனம், நபர், மிருகங்கள், கலாச்சாரம் சார்ந்து சார்ந்தோ இருக்க கூடாது என்பதற்காக இந்த WHO நிறுவனம் புதிய பெயரை மாற்றியுள்ளது.

COVID19 என்பது புதிய நோயாக இருக்குமோ என மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கொரானாவிற்கு பதில் மாற்றி வைக்கப்பட்டிருக்கும் பெயர் என்பதை ஊடங்கள் மூலம் வெளியாகும் தகவல்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம், COVID19 பற்றி பரவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

COVID19 நோயால் மலேசியா இன்னும் ஆபத்தான நிலையை அடையவில்லை. ஆபத்தான நிலைமை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மலேசியா தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன