ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிளவை உருவாக்க பாஸ் முயற்சி! – அன்வார் குற்றச்சாட்டு
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிளவை உருவாக்க பாஸ் முயற்சி! – அன்வார் குற்றச்சாட்டு

ஷாஆலம், பிப். 12-

நம்பிக்கைக் கூட்டணியின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டணியில் சிக்கலை உருவாக்க பாஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது என பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், மோசமாகத் தோல்வி அடைந்த பிறகு, மாற்று வழியைப் பயன்படுத்த கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால், பாஸ் கட்சி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, அவர் சுட்டிக் காட்டினார். துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக நிலைத்திருப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ கொண்டுவருவது குறித்து, பாஸ் கட்சி முன்மொழிந்திருப்பது அர்த்தமற்றது என்று அவர் சாடினார்.

சிலாங்கூர், ஷாஆலமில், புதன்கிழமை நடந்த, “2020 அமைதியான வாழ்க்கை மீதான வட்டார மாநாட்டில்” தலைமை உரையாற்றிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில், அம்னோவுடன் கைகோர்த்து, நம்பிக்கைக் கூட்டணியை வெல்வதற்கான இலக்கில் பாஸ் கட்சி இறங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் நம்பிக்கைக் கூட்டணியை வண்மையாகக் கண்டித்து வந்த பாஸ் கட்சி, தற்போது இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.

இருப்பினும், பாஸ் கட்சியின் இந்தச் சூழ்ச்சியினால் நம்பிக்கைக் கூட்டணி பாதிப்படையாது என்றும் அவர் தெரிவித்தார்.பாஸ் கட்டியின் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாம், நாட்டின் அரசியலை உறுதிப்படுத்தி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தப் போவதாக டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன