ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வடை அதிரசத்தை அடுத்து ரசத்தையும் சொந்தம் கொண்டாடும் மலாய் சமூகம்?
சமூகம்முதன்மைச் செய்திகள்

வடை அதிரசத்தை அடுத்து ரசத்தையும் சொந்தம் கொண்டாடும் மலாய் சமூகம்?

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைத் தங்களுக்குச் சொந்தமென ஒரு கூட்டம் அவ்வப்போது கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது.

வடை, அதிரசத்தை அடுத்து தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள ரசத்திற்கும் இந்த நெருக்கடி வந்துள்ளது. COVID19  (கொரோனா வைரஸ்) தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ரசம் நல்லது என அறிஞர்கள் கூறினார்கள். அதில் மஞ்சள் தூள் அதிகம் சேர்க்கப்படுவதாலும் இதர தானிய பொருட்களின் காரணமாக நம்மிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதை அடுத்து ரசத்திற்கு உரிமைக் கொண்டாடும் செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ரசம் மலாய் சமூகத்தின் கண்டுபிடிப்பு என்றும் பின்னாளில் அதைத் தமிழர்கள் தங்களுக்கு என மாற்றிக் கொண்டார்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு குறுஞ்செய்தி பரவுகின்றது.

பெரும்பாலும் இந்தச் செய்தி மலாய் சமூகத்தின் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது. ரசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் அது தங்களுக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக இருக்கின்றது.

இதை ஒரு வேடிக்கையாக நாம் எடுத்துக் கொண்டால் பின்னாளில் ரசம் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று என்பதை மலேசிய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி விடுவார்கள்.

அதற்கும் நாம் போர்க்கொடி தூக்க வேண்டிய நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. தமிழர்கள் தங்களின் பெருமைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதால்தான் இவ்வகையான சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நமது பாரம்பரிய உணவுகள், கண்டுபிடிப்புகள் நமக்கானது என்பதை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மலாய்க்காரர்கள் தற்போது வடை அதிரசத்தை விற்பனைசெய்யும் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வடையை ‘வடெ’ என அழைத்து அவர்களின் உணவாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதிரசம், வடையை அடுத்து அவர்களின் பார்வை இடியாப்பம், புட்டுமயம் ஆகியவை மீது திரும்பியுள்ளது. தற்போது ரசத்தைத் தங்கள் வசமாக்க சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.

நமது உரிமையை இழப்பது நமது அடையாளத்தை இறப்பதற்குச் சமம். அடையாளத்தை இழந்தால் நமது மொழியையும் இனத்தின் பின்புலத்தையும் இழந்துவிடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரசம் நம்முடையது என்பதை உரக்கச் சொல்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன