டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்

0
23

கொழும்பு, பிப்.12-

மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தமது பேராளர் குழுவுடன் இலங்கைக்கு 3 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

ம.இ.கா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நேற்று பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை பயணமானார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று இலங்கையின் தகவல், ஊடகம், உயர்கல்வி,  தொழில்நுட்ப அமைச்சர்  பண்டுலா குணவர்த்தனே அவர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின் போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பல விவகாரங்கள் குறித்து  அமைச்சருடன் கலந்துரையாடினார்.

அதன்பிறகு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நீதி, மனித உரிமை, சட்டத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா அவர்களை  மரியாதை நிமித்தம் சந்தித்தார். மேலும் மகளிர், குழந்தைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார, மருத்துவ சேவை அமைச்சர் திருமதி தேவி வன்னியராச்சி அவர்களையும் அவர் மரியாதை நிமித்தம்  சந்தித்துப் பேசினார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், செனட்டர் டத்தோ ஆனந்தன், எம்.ஐ.இ.டி தலைமை நிர்வாக அதிகாரி மும்தாஜ், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக  அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள்  சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.