ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வணிகப் பொங்கல் பண்பாட்டு பெருவிழா
சமூகம்முதன்மைச் செய்திகள்

வணிகப் பொங்கல் பண்பாட்டு பெருவிழா

ஷா ஆலம், பிப். 14-

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஷா ஆலம் எமரெல்ட் தமிழ்ப்பள்ளியில் வணிகப் பொங்கலும் பண்பாட்டு பெருவிழா நிகழ்ச்சியும் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார்.

டிரா மலேசியா இயக்கமும் எழுமின் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்தப் பொங்கல் விழாவில் 100 வணிக முகப்புகள் அமைக்கப்படவிருக்கின்றன.

இதன் வாயிலாக 100 தொழில் முனைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவிருக் கின்றது. தொழில் முனைவர்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்கான ஒரு தளமாக இது அமையவிருப்பதால்தான் இது வணிகப் பொங்கல் நான் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.

வரும் பிப்ரவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி இரவு 9.00 மணிவரை நடைபெறவிருக்கும் இவ்விழாவில், பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.

விளையாட்டுப் போட்டிகளோடு ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கின்றன. எனவே அனைவரும் இந்தப் பொங்கல் விழாவிற்கு வருகையளித்து ஆதரவு தந்து பயன்பெறுமாறும் சரவணன் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு: 016-4213241.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன