ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிரதமர் மாற்றம் : அடுத்த வாரம் அறிவிக்கப்படும்? அன்வாருக்கு எதிரான சூழ்ச்சி தொடர்கிறது?
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமர் மாற்றம் : அடுத்த வாரம் அறிவிக்கப்படும்? அன்வாருக்கு எதிரான சூழ்ச்சி தொடர்கிறது?

கோலாலம்பூர், பிப். 13-

அடுத்தப் பொதுத் தேர்தல் வரை துன் டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியில் நீடிப்பதை சட்டப்பூர்வமாக ஆதரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது உண்மைதான் என்பதைப் பிகேஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

அந்த நடவடிக்கைக்கும் துன் டாக்டர் மகாதீருக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பிரதமர் பதவி மாற்றம் குறித்துத் துன் டாக்டர் மகாதீர் உடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். பாஸ், அம்னோவுடன் இணைந்து கொண்டு ஒருசில பிகேஆர் உறுப்பினர்களின் முயற்சியை முன்னிறுத்தி இத்தவணை முடியும்வரை துன் மகாதீரின் தலைமைக்கு ஆதரவாகக் கையெழுத்து வேட்டை நடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அது குறித்துத் தாம் விளக்கம் கேட்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Perdana Menteri Dr Mahathir Mohamad tidak terlibat dengan usaha memujuk anggota parlimen menyediakan akuan berkanun (SD) bagi menyokong kepimpinannya sehingga habis penggal, kata Anwar Ibrahim.

Presiden PKR, yang dijanjikan sebagai perdana menteri kelapan, berkata demikian selepas bertemu dengan Mahathir bagi membincangkan isu mengenai peralihan kuasa.

“Saya bangkitkan isu tersebut kerana ada usaha daripada PAS, sekumpulan dari Umno dan sebilangan kecil dari PKR sendiri yang dipercayai berusaha mendapatkan tandatangan menyokong kepimpinan Dr Mahathir sehingga akhir penggal.

. ”இந்த நடவடிக்கையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஈடுபடவில்லை.” ”மாறாக வாக்குறுதி அளித்தபடி தாம் பதவி விலகுவதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று அன்வார் கூறினார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பாஸ், அம்னோ, பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தலைநகருக்கு வருமாறு வலியுறுத்தியதாகவும் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை துன் டாக்டர் மகாதீர் பிரதமர்பதவியில் நீடிக்கும் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டதாகச் சரவாக் ரிப்போர்ட் கூறியிருந்தது.

போதுமான ஆதரவு இருக்கும் பட்சத்தில் அதனைப் பேரரசரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சரவாக் ரிப்போர்ட் வதந்தியை பரப்பி இருந்தது.

முன்னதாக இன்று பிற்பகல் ஒர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த ஆண்டுப் பிற்பாதியில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலை மாநாடு வரை மகாதீர் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்று நம்புவதாகக் கூறியிருந்தார்.

இருப்பினும் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை கூட்டணியின் உச்ச மன்றக் கூட்டத்தில் பிரதமர் பதவி மாற்றம் குறித்த தேதி முடிவு செய்யப்படும் என்பதையும் அன்வார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன